Wednesday, 3 June 2009
என் தேவதைகள்.......பார்ட் 2
Tuesday, 2 June 2009
என் தேவதைகள் .....
ஒரே தம்பு சுதர்சனா !!! ஒரே சுதர்சனா !!! ஒரேஏஎஈயி சுதர்சனா ஆஆஆஆஆஆ !!! இது தான் என் முதல் அம்மா ....
முதல் மூன்று குரலுக்குள் நான் வந்ததாக சரித்திரமே இல்லை ....அதனால தான் இந்த மூணு டெம்போ-வுமே ஒன்னு பாசத்தோட கூப்பிட ...
ஒன்னு கெஞ்சலாக ...
ஒன்னு அதட்டி ( இல்ல மாரடைப்பால ) இந்த அம்மாக்களே இப்படி தாங்கற அளவுக்கு எங்க அம்மா மோசம் இல்ல...ஏன்ன என்னோட அம்மா கொஞ்சம் (உங்க அம்மாவ விட கொஞ்சமே கொஞ்சூனு) ஜாஸ்தி ஸ்பெஷல் ..... இந்திரான்னு கூப்பிடலாம் .....அம்மோய் ன்னு கூப்பிடலாம் .....எப்பிடி சொல்லி கூப்பிட்டாலும் ''ஏரா தம்புன்னு '' பாசத்தோட பதில் வரும்..... என்னடா கூப்பிடுறாதுல என்ன ஸ்பெஷல் ன்னா? அதுல இருக்குற பாசத்த பாருண்ணே ! அக்கா நீங்க பார்த்துட்டிங்களா? அய்யா நீங்க ?
உங்களுக்கு அந்த பாசம் தெரியாதுப்பு ஏன்னா அந்த பாசம் தெலுங்குல டிரன்சிலீட் பண்ணிருக்கு ...ஹி..ஹி...ஹி நினைவு தெரிஞ்ச முதல்ல இருந்து என்னோட முதல் அம்மா என்னோட முத அம்மா இல்ல !!! (அப்போ அதுக்கு முன்னாடி????) சும்மா பார்ட் டைம் ஜாப் தான் ...எப்பவாது வந்து ''நானு தார நீ அம்மா'' ன்னு பாசமழை போலிஞ்சுட்டு போவாங்க ....அந்த மழை-ல நனஞ்சு துவட்டிகுரதுக்குள்ள ஒரு வில்லி... அதுதான் என்னோடைய அப்போதைய டேம்போரரி அம்மா......அதாவது கதைப்படி ரெண்டாவது அம்மா . அவங்க தான் என்னோட அவ்வா !!!( ச்சே ச்சே இப்பிடி எல்லாம் அப்போ மரியாதை குடுத்ததே இல்ல ..குடும்பத்துக்குள்ள எதுக்கு மரியாதை ஃபார்மாலிடி எல்லாம் ??).. .... பச்ச புள்ள (நானு தான்) அவ்வா - வ வில்லன்குது? ..... ஏன்??? .... அது ஒரு பெருங்கதை ..... ஒரு சின்ன பிளாஷ்பாக் ..... காலைல 4 மணி ...டிங் டிங் டிங்.... எயந்துறு அஞ்சலி ...எயந்துறு சுதர்சனா -ல்லாம் இல்ல எட்டி ஒரு மிதி(கொஞ்சம் exaggaration) இல்லன்னா ஒரு கிள்ளு ...ஏனுன்னா நானு படுக்கைல உச்சா போயிருப்பேன்....(நான் என்ன பண்றது ..மை டியர் குட்டி சாத்தான் வந்து ஐ லவ் யு டா செல்லம்ம்னு சொல்லுச்சு ) எழுந்து குளிச்சு ( நாலு வயசு பச்ச புள்ளைங்க ) சுப்ரபாரதம் சொல்லி ...அந்த ஸ்ரீ ராமன துணைக்கு கூப்பிட்டு வாய்ப்பாடு சொல்லணும்...இதுக்கு முன்னாடி பல்ல விளக்கி விளக்காம குளிச்சும் குளிக்காம துண்ட கண்டிக்கிட்டு பால் வாங்க போனும் ....இதுல அந்த படுபாவி பால்காரன் ரெண்டே ரெண்டு மணி தான் அடிப்பான்.....மிஸ் ஆச்சு நான் பீஸ் தான்....... அதுக்கப்புறம் முன்னாடி உக்காந்துகிட்டு ஸ்லோகம் சொல்லணும் ....தமிழ் வருஷம்-தோட அத்தனை போரையும் மனப்பாடம் பண்ணனும் ...ஏ ஃபார் ஆப்பிள் ...பி ஃபார் பால் எல்லாம் இல்ல..... அதெல்லாம் ஏற்கனவே மூனாவது அம்மா சொல்லி குடுதுடுச்சு.....இத பார்ர்ரா கொடுமைய ன்னு நீங்க மூச்சு விடுறது கேக்குது .....பச்ச புள்ளைய கொடுமை கொடுமைன்னு கொனட்டுல கும்முனது இன்னும் ஞயாபகம் இருக்குதுங்க .... அதுக்கு தான் ஒரு ஆறுதலாக இருக்குமே ன்னு ஒங்க கிட்ட பகுந்துக்க வந்தேன் ..... போயி மூக சீந்திட்டு முகங்களுவிட்டு வர்றேன் .....