Wednesday, 3 June 2009
என் தேவதைகள்.......பார்ட் 2
.....
.....
அதுக்கப்புறம் பச்ச புள்ளைய கும்முனது 3 ஆவது அம்மா ....எனது பெரியம்மா அருணா ....
ஆலடி அருணா யாருன்னா எல்லோருக்கும் தெரியும் .....ஆனா அடாவடி அடிதடி (பச்ச புள்ள ஸ்பெஷலிஸ்ட் ) அருணா தான் என்னோட பெரியம்மா ...ஆனா எங்கம்மா வைவிட கொஞ்சம் உயரத்துல சின்னவங்க
....
கோபத்துல யாரும் முன்னாடி உக்கார முடியாது ...தொடைய பிடிச்சு கிள்ளுநாங்கன்னா பாதி சாப்பாடு தொடை வழியா ஓட்டை போட்டுக்கிட்டு வந்திடும் .....இதுல வயித்தில வேற சில சமயம் கோலம் போடுவாங்க.....எப்படா இந்த ரத்த காட்டேரிக்- கிட்டயிருந்து தப்பிப்போம்-னு இருக்கும்....
இவங்க பொழுதுபோக்கே எனக்கு சொல்லிதறறது தான் ...ஏன்னா அப்பா தானே துணி துவைக்கலன்னாலும் பச்ச புள்ளைய துவைக்கலாம்....
....
தான் 15 வருசத்துல படிச்சத பச்ச புள்ளைக்கு 15 நாளைக்குள்ள சொல்லித்தந்திடனும்னு ஒரு பேராசை.....
இதெல்லாம் விட ஒருத்தார் இருந்தாரு
அது என்னோட சின்ன மாமா ....இவருக்கு என் காத திருகி அம்பாரமா என்ன தூகுரதுல ஒரு அளவிலாத ஆனந்தம்...இவரு தேவதைங்க கூட்டத்துல சேர முடியாது எனவே இவர தள்ளி வைக்கலாம்....
சரி இந்த மூணு பேரும் என்ன தான் பண்ணாங்க?
அவ்வாக்கு நான் எல்லாம் தெரிஞ்ச குஞ்சா இருக்கணும்னு ஆசை....
பெரியம்மாவுக்கு இங்கிலீஷ் பேசுற ...இல்ல இல்ல பொளந்து கட்டுற துரையாக்கனும்னு ஆசை....
அம்மாக்கு தான் ஒரே தடவ கூப்பிட்ட உடனே மகன் ஓடி வந்திடம்னு பேராசை....
சரி ஏன் இவங்கெல்லாம் இந்த்க்த பச்ச புள்ளைய புடிச்சு இந்த பாடா படுத்தினாங்க?
இவ்வளவு ஆசைகளா ஏன் இந்த பச்ச புள்ள மேல திணிச்சாங்க??
அந்த பச்ச புள்ள என்ன அப்பிடி பாவம் பண்ணுச்சு?
ஆங் ...அப்பிடி கேளுங்க !!!
இப்ப தான் நம்ம கதாநாயகன் என்ட்ரி ....
இந்த பச்ச புள்ள இருக்கானே இவன் ஒரு படு (அப்)பாவி ....
கொஞ்சம் அவன பத்தி .......
பச்ச புள்ள அவ்வா பொறந்தது எப்பிடி ன்னு பச்ச புள்ளைக்கு தெரியாது ...ஆனா இறந்தது மட்டும் கண்டிப்பா தெரியும்.....
டெய்லி ஈவ்னிங் கிருஷ்ண பரமாத்மா கிட்ட மனு போட்டு ஸ்கெட்ச் போட்டு தூக்க சொன்னதே பச்ச புள்ள தான்...
அப்பவே பச்ச புள்ளைக்கு ஸ்கெட்ச் போட்டு பழக்கம்...???? (......அப்பிடி எல்லாம் நினைச்சுடாதிங்க....)
அறியாத வயசு புரியாத மனசு ......
பயங்கரமான சுருசுறுப்பில்லாத அசமஞ்சம்...
கறி தாளிகை பண்றதுக்கு ஓடி போயி கொத்தமல்லி கருவேப்பிலை வாங்கி வாடான்னா.....ஓஓஓஓஓஓடி போயி.... வாவாவாவாங்கி சாயந்திரத்துக்குள்ள வீட்டுக்கு வந்து சேந்துடுவான்....இடைல மாமா கடைல முறுக்கு வாங்கி .....எதாவது தெருஞ்சவங்க தெரியாதவங்க வீட்டுக்கு போயி வெள்ளம் வாங்கி ....தின்னு திமிரி ..விளையாண்டு ...கட்டிபுரண்டு ....வீடு வந்து சேர்றதுக்குள்ள அம்மா சீக்கிரமே (பார்த்திங்கள அநியாயத்த )....சமையல் பண்ணி சாப்பிட்டு ஏதோ பச்ச புள்ள தான் லேட் ன்ற மாதிரி அடிக்க விளக்கமார தூக்கிட்டு நிக்கும்....
பாவம் பச்ச புள்ள ..அம்மா தானே ன்னு அழுகாம அடி வாங்கி சமத்தா இருப்பான்/
பெரியம்மாவுக்கு பச்ச புள்ள ஸ்கூலுக்கு போறதுக்கு முன்னாடியே பச்ச புள்ளைக்கு எல்லா சொல்லி தந்துடனும்னு ஒரே பிடிவாதம்....அப்பாவும் பச்ச புள்ள சரி நம்ம பெரியம்மா தானே ன்னு எல்லாத்தையும் மண்டையில் ஏத்திக்கிட்டு திரும்பவும் கிள்லோ..அடியோ..வாங்க ரெடியாக இருப்பான்......
இப்பிடி அடி வாங்கி வாங்கி பச்ச புள்ளைக்கு கொஞ்சம் மரத்து போனது என்னவோ உண்மை தான் ......மண்டையில கொட்டு வாங்கி வாங்கி புத்தி மழுங்கி போனது என்னவோ தார்மீகம் தான்....
அதுக்கு மேல பச்ச புள்ளைக்கு நினைச்ச அழுவாச்சியா வரும் சமயத்துல........
எம்புட்டு ...கொட்டுப்பட்டு ...கட்டு போட்டு ...சிக்கி ....சின்னா பின்னமாகி ....அவங்க கஷ்டப்பட்டு சொல்லி குடுத்ததெல்லத்தையும் மறந்து தேமேன்னு எனக்கென்ன விருந்தோன்னு இருந்தத நினைச்சு ......
இவங்கெல்லாம் அன்னைக்கு அடிச்சு பிடிச்சு அஸ்திவாரம் போடலேன்னா இன்னைக்கு பச்ச புள்ள எங்கேயோ அமெரிக்கா-ல உக்காந்து அல்லோல் பட்டுக்கிட்டு இருந்திருக்கும்.....
நல்ல வேளை....பொழச்சுக்கிடுச்சு.....(அமெரிக்கா தான் ....ஹி.....ஹி.....ஹி.....ஹி.....)
ஆனா பச்ச புள்ளைக்கு லவ் மட்டும் பொசுக்குன்னு மூச்சுக்கு முன்னூறு தடவ வந்துடும்....இந்த ரேட் ல மட்டும் கோவம் வந்துருந்தா என்ன ஆகிருக்கும் ? நினைச்சாலே கதி கலங்குது.....
முளைச்சு மூணு இலை கூட விடல ..அதுக்குள்ள பச்ச புள்ளைக்கு மூணு காதல்.....
அடி யாத்தி ......டவுசரே இடுப்புல நிக்காத வயசுல 3 காதலா ?
இது பெரிய ஜிக்கிலிஜெட்டா-ள்ள இருக்கு ?
ஜிக்கிலி ஜெட்டுன்னா? .......
-- ---ஷமி( http://sudharsang.blogspot.com )
Subscribe to:
Post Comments (Atom)
8 comments:
சும்மா கலக்கல் பதிவு நண்பா
//கோபத்துல யாரும் முன்னாடி உக்கார முடியாது ...தொடைய பிடிச்சு கிள்ளுநாங்கன்னா பாதி சாப்பாடு தொடை வழியா ஓட்டை போட்டுக்கிட்டு வந்திடும் //
ஹீ ஹீ நல்ல ஞியாபகம் எனக்கு இருக்கு
ஒரு சந்தோசம் எனக்கு மட்டும் தான் இப்படி என்று நினைத்து இருந்தேன் அது இல்லை :-0
//இப்ப தான் நம்ம கதாநாயகன் என்ட்ரி ....
இந்த பச்ச புள்ள இருக்கானே இவன் ஒரு படு (அப்)பாவி ....
கொஞ்சம் அவன பத்தி ....//
ஹா ஹா சூப்பர் இண்டரோ சாங்க் இல்லையா
//ஆனா அடாவடி அடிதடி (பச்ச புள்ள ஸ்பெஷலிஸ்ட் ) அருணா தான் என்னோட பெரியம்மா //
ஐயோ என் பெயரில் இப்படி ஒரு வில்லியா??????!!!
உங்களை போல் ஊக்கம் கொடுக்க ஒரு சிறந்த நண்பன் கிடைக்க வேண்டுகிறேன்
சரிடா ... வார வாரம் வந்து கமெண்ட் எழுதிடு ஓகேயா .... .....
(அதான் ஃபிரண்டு ஆயச்சுள்ள அதுக்கப்புறம் என்னத்துக்கு மரியாதை...???)
ஷமி
சரி டா மச்சான் ;-)
உனக்கு ஹிந்தி எல்லாம் தெரியும் போல
அப்பப்ப உங்க மாதிரி தமிழ்-ல கலக்க யாராலும் முடியாது போங்க.... என்ன ஒரு நளினம்... வார்த்தை விளையாடல் என்பது இது தானோ...
நியாபகங்கள் பலவற்றை நாசுக்காக வெளிக்கொணர ஒரு தனி திறமை வேண்டும்....அது உங்களிடம் ஹ்ம்ம்ம்ம்ம்ம்ம் சொல்ல வேண்டாம்...
உங்கள் எழுத்துக்கள் தொடர வாழ்த்துக்கள்.... :)
தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.
அன்புடன்
www.bogy.in
Post a Comment